மேலும் பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

மேலும் பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், வைத்தியசாலை, மிருகக்காட்சி சாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்கள், நோயாளர்களை பராரித்தல், பாதுகாப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
