மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய தீர்மானம்

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைய மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் றறற.றிவயஒi.டம என்ற இணையத் தள முகவரிக்குச் சென்று வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு தொடர்பான சகல விபரங்களும் இந்த இணையத் தளத்தில் காணப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றும் இந்தப் பதிவினை மேற்கொள்ள முடியும்.
