மேல்மாகாணத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விஷேட டெங்கு ஒழிப்புவேலைத்திட்டம் அமுலாகும் என கொழும்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. அங்குரார்ப்பண நிகழ்வு கடுவெல பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளது. நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 49 சதவீதமானோர் மேல்மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.