மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 283 ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை

மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட 283 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதற்கு இலங்கை காணி மீட்டல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படலாமென அஞ்சப்படுகிறது. இதற்குத் தீர்வாக குறித்த காணிகளில் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் செய்கை பண்ணப்படவுள்ளன. பெப்பிலியான, பில்லேவ, நாவின்ன, கட்டுவாவல, போகுந்தர, கெஸ்பாவ, பிலியந்தலை உள்ளிட்ட பிரதேசங்களிலேயே இந்தக் காணிகள் இனங்காணப்பட்டுள்ளன.
