மேல் மாகாண பாடசாலைகளில் நாளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட தவணை பரீட்சைகள் சிலவற்றை பிற்போடுவதற்கு தீர்மானித்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஷ் தெரிவித்துள்ளார். இதன்படி 10ஆம் 11ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும். தரம் 9 இற்கான பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் நாளை எதிர்கொள்ள நேரிடும் போக்குவரத்து பிரச்சினையினை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். எனினும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் உரிய வகையில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு பாடசாலைக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஷ் தெரிவித்தார்.