Home » யதார்த்தங்களை புரிந்து கொண்டு செயல்படுவதே இன்றைய சூழ்நிலைக்கு சாத்தியமானது – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

யதார்த்தங்களை புரிந்து கொண்டு செயல்படுவதே இன்றைய சூழ்நிலைக்கு சாத்தியமானது – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

Source
எவர் எதைத்தான் பேசினாலும் இந்திய அரசின் அதிகார மைய ஆட்சிக்கு உட்பட்ட மாநில சுயாட்சி முறை சட்டங்களுக்கு மேலான ஒரு சுயாட்சி அந்தஸ்தை இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்குத்தீர்வாக இந்தியாஒருபோதும்தர முன்வராது. எனவே இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டு செயல்படுவதே இன்றைய சூழ்நிலைக்கு சாத்தியமானது என்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார். கலாசாலையில், இன்றைய தினம் (04) நடைபெற்ற 75ஆவது சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆசிரியர்களை வழிப்படுத்தும் கல்வியலாளர்கள் மத்தியிலும் இலங்கை சமூகத்தை கட்டி எழுப்பும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இணைந்த சேவைகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இச்சிறப்புரையை நிகழ்த்துவதில் உவகை அடைகின்றேன். நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு என்னும் தொனிப்பொருளில் நிகழும் இந்த சுதந்திர தின வைபவத்தில் மக்கள் நாம் சிந்திப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் அவ்வண்ணமே செயல்படுவதற்குமான நிர்வாக முகாமைத்துவ நெறிமுறைகளை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் பின்பற்றுவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் இலங்கை மக்கள் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளோம். இலங்கை தீவின் சுதந்திரத்தின் பின்னரான அரசியல் நிலைமைகளும் அதன் போக்குகளும் இந்நாட்டின் கல்வி பொருளாதார அபிவிருத்தி போக்குகளிலும்நடைமுறையிலும் செயல்படுவதிலும் அமுலாக்கத்திலும் எத்தகைய எதிர்வினைகளை உண்டு பண்ணி உள்ளது என்பதை இலங்கை தீவின் குடிமக்கள் என்ற வகையில் நாம் கடந்த காலங்களில் அறியாததும் அனுபவிக்காததும் ஏதுமில்லை. இந்த பின்புலத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை அனுபவிக்கும் தருவாயில் நாம் இலங்கையர் என்ற உணர்வுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரம் என பெற்றுக் கொண்டு அனுபவித்தவை எவை என்பதை பட்டியல் படுத்தினால் நாம் அனுபவித்த வலிகளும் வேதனைகளும் துயரங்களும் ஓலங்களும் தான் அதிகம் சுதந்திரத்தின் பின் நாம் நீண்டதொரு பயண பாதையை கடந்து நிற்கின்றோம். இப்பாதையில் நாட்டின் அரசியல் இறைமை தன்னாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டிருந்த போதும் நாம் இஸ்தித்திரமான பொருளாதார கட்டமைப்பை உடையவர்களாக நிலைபேறுடைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக செய்யநாம் மனப்பாங்கு அளவிலும் நடத்தை சார் அளவிலும் வளர்ச்சி பெறவில்லை. தாய் நாட்டை நேசிக்கும் சிந்தனையும் மனப்பக்குவமும் நிறைந்த பிரசைகளாக எம்மையும் எமது எதிர்கால சந்ததியையும் உருவாக்குவதில் நாம் பின்னடைவு கண்டே வந்துள்ளோம். இதற்கு காரணம் எம்மிடையே எமது நாடு பற்றிய மனப்பாங்கு எமது கல்வி முறை மூலமாக முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. பரிட்சையை மையமாகக் கொண்டு கல்வி முறை மூலம் வினாக்களுக்கு விடை அளிக்கும் அறிவை மாத்திரம் பெற்றுக் கொண்டோம் திறனும் மனப்பாங்குமற்ற சமுதாயத்தை உருவாக்கி உள்ளோம். செயல்முறை கல்வி மீதான மனப்பாங்கும் திறனும் அறிவும் வளர்த்தெடுக்கப்படவில்லை. உற்பத்தி பொருளாதாரம் நலிவடைந்து இறக்குமதியை நம்பி வாழும் நாடாக எமது நாடு மாற்றப்பட்டது. சகல விதமான வளங்கள் இருந்தும் தன்னிறைவு பொருளாதாரம் உற்பத்தி முறை கொள்கைய வகுப்புகள் சரியாக முன்னெடுக்கப்படாமையால் கடன் வாங்கி காலம் கழிக்கும் நாடாக இலங்கை மாற்றம் கண்டது. இந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக நாட்டில் புறரைஓடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு கடந்த 75 ஆண்டு காலமாக தீர்வு காணப்படாமையும் அதன் விளைவாக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட இன மோதல்களும் யுத்த வன்முறைகளும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றும் இந்த பின்புலத்தில் நிகழ்ந்த அரசியல் ஸ்த்திரமின்மையும்இலங்கைநாட்டை வறுமை அடையச் செய்ததோடு இலங்கை பொருளாதாரத்தை மிக மோசமான பின்னடைவுக்கு இட்டு சென்றது. வரலாற்றில் முதல் தடவையாக பணவீக்கம் எல்லை மீறியது இலங்கை தீவுக்கு நாடுகள் உதவி செய்யத் தயங்கின கடன் சுமையை குட்டி தீவு தாங்க முடியாது பரிதவிக்கிறது. இந்த பின்புலத்தில் அடிப்படை வசதிகளை கூட இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் பிந்தள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இன்டர்நேஷனல் டிரான்ஸ்பரன்சி ஆய்வு அறிக்கை பிரகாரம் லஞ்ச ஊழல் மோசடிகள் நிரறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 36 வது நாடக முன்னனேறி இருப்பது 180 நாடுகளில் மேற்கொண்டாய்வில்101வதுநாடாக இருந்த இலங்கை இவ்வாறு மாற்றங் கண்டுஇருப்பது இலங்கையின் கல்வி பொருளாதாரம் அரசியல் சமூகம் பண்பாடு என்ற பார்வை நாம் எமது கல்விக் கொள்கை வகுப்புகள் மூலம் அரசியல் பொருளாதாரம் அபிவிருத்தி கொள்கை வகுப்புகள் மூலம் எவ்வற்றை சாய்தித்து இருக்கின்றோம் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றனர். எமது நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமானால் நாம் சட்டத்தை நாட்டையும் மதிக்கின்ற மனப்பான்மையுடைய பிரசைகளாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தகையதொரு மனப்பாங்கு மாற்றமே நூற்றாண்டுக்கான முன்னெடுப்பாக அமையும். எனவே அர்ப்பணிப்பு மிகுந்த மனப்பாங்குடன் இதயசுத்தியுடன் நாம் ஒவ்வொருவரும் இலங்கை பிரதிகள் என்ற உணர்வுடன் தாய் நாட்டை பாதுகாக்க உணர்வோடு உழைக்க வேண்டும். அர்த்தமற்ற இனவாத சிந்தனைகளும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் ஜனநாயக கொள்கை பரப்புரைகளும் கொள்கை மற்றும் தெளிவு அற்ற முறையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள. பெருந்தொகையான அரசியல் கட்சிகளும் குழுக்களும் தங்கள் சொந்த நலன்களை பெறுவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் சாதிவாதத்தையும் தூக்கி நிறுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்நாட்டின் நீண்ட கால இனப் பிரச்சினையை ஆராத நீண்ட நாள் புண்ணாக்கி இந்நாட்டை சீரழித்து இருக்கிறது. 48 தருகின்றோம் என சிங்கள ஆட்சியாளர்கள் சம்மதித்த போது 50 50 கேட்டு அதை கைவிட்டது. பண்டா செல்வா ஒப்பந்தம், ஸ்ரீமாசா ஸ்திரி ஒப்பந்தம், தீம்பு பேச்சு வார்த்தை, இந்திய இலங்கை ஒப்பந்தம், சந்திரிகா – புலிகள் ஒப்பந்தம் ரணில் பிரபா ஒப்பந்தம், ஒஸ்லோ இணக்கப்பாடு கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கம் அதன் மூலம் தீர்வு என பல ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் . இவை நிராகரிக்கப்பட்டமை. கிழித்தெறியப்பட்டமை. ஒருபுறம் சிறுபான்மையின அரசியல் தலைமைகள் தங்கள் நலன்களுக்காக காலத்துக்கு காலம் தனி நாடு, சமஸ்டி, 13வது திருத்தச் சட்டம் என கூப்பாடு போடுவதும் இந்நாட்டு மக்களுக்கு நிம்மதியான தீர்வை வாழ்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஒருபோதும் சாத்தியமாகாத நிலைமையை தோற்றுவித்துவிட்டது. எனவே குறைந்தது தற்போது இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதை ஆரம்ப புள்ளியாக கொண்டு முதற்கட்ட தீர்வாக அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முறையான அரசியல் தீர்வுக்கான சாத்தியப்பாட்டை வழங்க முடியும். தொழில்நுட்ப கல்வி முறையை ஊக்குவித்து தொழில் புரட்சியை மேற்கொள்வதும் கட்டி எழுப்புவது ம் அதற்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் செயல்முறை ரீதியான கல்வியை ஊக்குவிப்பதும் கலையையும் பண்பாட்டையும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் உல்லாச பயண துறையை ஊக்குவிப்பதும்தகவல் தொழில்நுட்பத்திறன்களை வளர்ப்பதும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது ஏற்றுமதி இறக்குமதி பொருளாதார கொள்கை வகுப்புகளை சமகாலச் சூழலுக்கு உகந்ததாக ஏற்படுத்திக் கொள்வதும் போதைப் பொருள் பாவனை தடை செய்வதும் அதற்கானசட்டமூலங்களை இறுக்கமாக்குவதும் முக்கியமானது. இலங்கை தீவானது தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால் வெளியுறவுக் கொள்கைகளில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது ஆசிய வளையத்தில் அயலுறவுக் கொள்கையை இந்திய அரசுடன் வலிமை உடையதாக்கி கொள்வது முக்கியமானது. எமது நாட்டை பொறுத்தவரையில் எமது தாய் நாட்டுடன் ராஜரிக உறவு வைத்துள்ள நாடுகள்மதங்கள் நாட்டின் நலன் சார்ந்து தொழிற்படும். அந்த வகையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு எவர் எதைத்தான் பேசினாலும் இந்திய அரசின் அதிகார மைய ஆட்சிக்கு உட்பட்ட மாநில சுயாட்சி முறை சட்டங்களுக்கு மேலான ஒரு சுயாட்சி அந்தஸ்தை இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்குத்தீர்வாக இந்தியாஒருபோதும்தர முன்வராது எனவே இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டு செயல்படுவதே இன்றைய சூழ்நிலைக்கு சாத்தியமானது உலகில் நாம் எப்பாகத்தில் வாழ்ந்தாலும்தமிழர் என்றோ முஸ்லிம்களென்றோ மலை நாட்டவர் என்றோ அழைக்கப்பட மாட்டோம் நாம் இலங்கையர்என்றே விளிக்கப்படுவோம் எனவே நாம் இலங்கையர் என்ற உணர்வுடன் நமது தாய் நாட்டை நேசிப்போம் நூற்றாண்டின் முன்னேற்ற பாதையில் தாய் நாட்டை உயர்த்துவோம் . AR
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image