யானை – மனிதர் மோதலைத் தவிர்ப்பதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

யானை – மனிதர் மோதலை தவிர்ப்பதற்காக நீண்டகால வேலைத்திட்டம் அவசியம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. காட்டு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இந்த வருடத்தில் முன்னெடுப்பது பற்றி கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். 4 ஆயிரத்து தொள்ளாயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 500 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைப்பதற்குத் திட்;டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
