Home » யால சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

யால சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

Source
Share Button

யால பூங்காவிற்குள் பிரவேசித்து, வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி தாவரச் சட்டத்தை மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பூங்காவின் பொறுப்பாளர் இதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார். அவ்வாறே, இந்த சம்பவத்தில் தமது கடமைகளை புறக்கணித்த ஏழு அதிகாரிகளின் சேவைகள், விசாரணைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விசாரணைகளின் போது, இந்த குழுவுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளின் பெயர்கள் வெளியானால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூங்கா அதிகாரிகள் கடமை தவறியமை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தீர்மானித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image