இலங்கையில் இருந்து வெளி நாட்டவர்கள் சிலர் தமிழ்நாட்டின் கோடியாக்கரை ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாக இடம்பெற்ற தேடுதலில் போலந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்தாட்டின் கோடியாக் கரையில் ஓர் காற்றுப் படகு கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்து நாகை மாவட்டம் முழுமையாக தீவிர தேடுதல் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் இந்தப் படகில் பயணித்து சென்னைக்கு வழிகேட்டதாக கிராம மக்கள் ஒருவரைப் பிடித்து தமிழக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரசையில் குறித்த படகின் மூலம் தமிழ் நாட்டிற்குள் வந்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
போலந்தில் இருந்து இலங்கை வந்தபோது வெலிமடைப் பகுதியில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைத் தாக்கியதனால் ஏற்பட்ட வழக்கு நடவடிக்கைக்காக கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாகவும் அதனாலேயே தமிழ் நாட்டிற்கு தப்பி வந்த்ததாகவும் கூறியுள்ளதோடு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகரில் இருந்து புறப்பட்டே இந்தியாவை அடைந்த்தாகவும் தெரிவித்துள்ளார்.
TL