யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சமயம் படகு பழுதடைந்த காரணத்தினால் தமிழகத்திற்குள் நுழைந்த்தாக தெரிவித்த இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் சரகம் , சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் இருந்து தொலைபேசி மூலம் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் வந்ததான தகவலின் பேரில் விசாரணை செய்ததில் சக்கோட்டையைச் சேர்ந்த றொபின்சன் என்பவருக்கு சொந்தமான படகில் 31.07.2022 ஆம் தேதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புறப்பட்ட வி.ஜெனார்தனன், வயது 28 , இன்பசிட்டி, யாழ்பாணம், மற்றும் கா. ஜெசிகரன் பலாலி, யாழ்பாணம், ஆகிய இருவரும் தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1ஆம் திகதி 03.00 மணியளவில் இந்திய சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் பிளாஸ்டிக் வெற்றுக் கானை பிடித்து உயிர் தப்பியுள்ளனர். இதன்போது இன்று O2.08.2022 ஆம் தேதி காலை 07.00 மணிக்கு சிறுதலைக் காடுகடற்கரைக்கு வந்தவர்களை தமிழ்நாடு IND TN06 MO 8106 என்ற இலக்க படகில் இரு மீனவர்களையும் படகில் ஏற்றி இன்று மதியம் 14.00 மணிக்கு கொண்டு சென்றதாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் முதல்தடவை வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இருந்தபோதும் இவர்கள் பயணித்த படகு மூழ்காது தமுழ்நாட்டின் கரையை அடைந்து பிறிதொரு இடத்திற்கு சென்ற சமயமே தமிழக படகுல் சென்றதோடு கடந்தலை ஏற்கவே வந்ததாக இருவரிடமும் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில் ஒப்புக்கொண்டதன் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும. இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய எல்லைக்குள் சென்றதாக முன்னர் வெளியாகிய செய்திக்கு வருந்துகின்றோம்.
TL