இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக் கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய ஆர்ப்பாட்டமும் மாவட்டச் செயலகம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
இதேநேரம் யாழ்ப்பாணம. பிரதான நூலகம் முன்பாகவிருந்தும் ஓர் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அங்கும் சிலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அதிகாலையில் இருந்து கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. மூளாயில் வீதியில் ரயர் போட்டு கொளுத்தப்பட்டது.
இதேநேரம் இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டபோதும் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
இவ்வாறு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் யாழ். பல்கலைக் கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியங்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் பெரும. திரளாணோர் கலந்துகொண்டனர்.
இதில் மாணவர்கள், மத தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக் கணக்காணோர் பங்குகொண்டனர்.்
இவ்வாறு பங்குகொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவான், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களான வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் உட்பட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள், ஏனைய உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
TL