ஜனாதிபதியுடனான பேச்சுத் தொடர்பில் தமிழ் தேசிய 6 கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்றுகூடி ஆராய்ந்தனர்.
நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இச் சந்திப்பில் ஈடுபட்டனர்.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல், ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


TL