யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள்.

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் ரயிலே திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்தார்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் டகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
