யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையமாக இது விளங்கவேண்டும். இதற்கு ‘சரஸ்வதி மண்டபம்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையின் அபிவிருத்தி குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
இந்த காலாசார மையமானது பொதுவான கலாசார மையமாகவே இருகின்றது. இந்திய இலங்கை உறவு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது.
தமிழ் மக்களின் சுதந்திரத்தை மையப்படுத்தியே 75ஆவது சுதந்திர தின நிழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் ஒரு அங்கமே இந்த காலாசார மையம் மக்களுக்கும் வழங்கும் நிகழ்வானது
யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை மையப்படுத்தியே கிக்கடுவையிலுள்ள பௌத்த தேரரும் அதனை முன்னெடுத்திருந்தார்.
ஆறுமுகநாவலர் முன்னெடுத்திருந்த பணிகளில் இருந்து தான் சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.
இந்தக் கலாசார மண்டபம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. தமிழ் மக்களின் கலாசார மத்திய நிலையமாக இது விளங்கவேண்டும். இதற்கு ‘சரஸ்வதி மண்டபம்’ எனப் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒரு நாணயத்தின் இரு முகங்கள் போன்று இலங்கை – இந்திய கலாசார இணைப்பு எப்போதும் பிரிக்க முடியாததாக இருக்கும்.- என்றார்.
இந்நிலையில் இந்திய பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள பின் தங்கிய 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.
வாழ்நாள் முழுவதும் அழியாமல் துணை நிற்பது கல்வி ஒன்று மட்டுமே செல்வமோ அல்லது நண்பர்களோ என்றும் நிலையானது இல்லை.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அயலவர்களுக்கு முதலிடம் என்ற பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் இந்தியா பல உதவிகளை வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்வதை போன்று இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புகளை தொடர்வதற்கு விமான சேவை மற்றும் கப்பற்சேவைகளை ஆரம்பிக்க வேண்டிய பணிகளை இந்தியா விரைந்து முன்னெடுத்து வருவகின்றது என்றார்.
TL