யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று ஆரம்பமானது. எதிர்வரும் சனிக்கிழமை வரை இது இடம்பெறும். யாழ்ப்பாணத்தில், காணாமல் போனோர் தொடர்பான பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெறுகிறது. கிளிநொச்சியில், மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டடத்தொகுதியில் விசாரணை நடைபெறுகிறது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் முன்னெடுக்கும் இந்த விசாரணையில், காணாமல் போனோரின் உறவினர்கள் சாட்சியம் அளிக்கின்றனர்.