Home » யாழ். பல்கலைக்கழக ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழக ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு

Source

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு ஜூலை 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.

இது தொடர்பாக, ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாட்டின் அமைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை அது ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவுதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாடு 2022 (Jaffna University International Research Conference 2022 (JUICE 2022)) இன் ஒரு துணை மாநாடாகவும், “மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்” என்ற கருப்பொருளிலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், ‘மானுடம் ஆராய்ச்சி மாநாடு -2022’ இனை இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

நாடு ஒரு பெருந்தொற்றுநோயின் பிடியிலும், நாட்டினுடைய கல்வி உட்பட பல்வேறு துறைகள் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலிலே, இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் மூன்றாம் நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் நூறு ஆண்டுகளின் (1921 – 2021) பூர்த்தி இடம்பெற்றிருக்கிறது.

புரட்சிகரமான திறவுகள் மற்றும் நெருக்கடிமிக்க சவால்களை உள்ளடக்கிய இந்த நூற்றாண்டுகால கால வரலாற்றை மீட்டுப் பார்த்து, அதனை விசாரணை செய்யும் செயன்முறைகளின் ஒரு பகுதியாகவும், மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவுதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடு அமையும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29ஆம் திகதி) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகும் தொடக்க நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

மாநாட்டின் பிரதான ஒழுங்கமைப்பாளர் கலாநிதி ரி.சனாதனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஆய்வு மாநாட்டின் பிரதம ஆசிரியர் கலாநிதி எம். திருவரங்கன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டின் முக்கிய உரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பீடாதிபதியான வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கே. இந்திரபாலா ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மனிதப் பண்பியற் கற்கைகள் : முதற் பத்தாண்டுகள் (1974 – 1984)’ என்னும் தலைப்பிலும், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுஜித் சிவசுந்தரம் ‘இலங்கையில் மானுடர்களும் சூழல்களும்’ என்னும் தலைப்பிலும் நிகழ்த்தவுள்ளனர். நன்றியுரையினை மாநாட்டின் செயலாளர் அபிராமி ராஜ்குமார் நிகழ்த்துவார்.

தொடர்ந்து, மாநாட்டின் பிரதான நிகழ்வுகளான குழுநிலைக் கலந்துரையாடல்களும் ஆய்வுக் கட்டுரை அமர்வுகளும் அடுத்த நாள் சனிக்கிழமை (30ஆம் திகதி) முழுநாள் அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. இந்த அமர்வுகளில் பின்வரும் கருப்பொருட்களில் ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படவுள்ளன.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image