Home » யாழ். பல்கலை மாணவர்களுக்கு BOC விருது வழங்கலுக்கு உடன்படிக்கை கைச்சாத்து

யாழ். பல்கலை மாணவர்களுக்கு BOC விருது வழங்கலுக்கு உடன்படிக்கை கைச்சாத்து

Source

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட மாணவர்களுக்கு “BOC விருது” என்ற நாமத்தில் தங்கபதக்கம் ஒன்றினை வழங்க உத்தியோக பூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை வங்கி இணைகின்றது.

மனித நாகரீகத்தின் தோற்றம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது அதன் ஓர் அங்கமாக வணிகமும், வணிகம் சார் நிறுவனங்களின் வளர்ச்சியினையும் நோக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது. அதே வேளை ‘திரைகடல் ஓடி திரண்டதொரு திரவியம் தேடு’ என்கின்ற சித்தாந்தத்துக்கு ஏற்ப வரலாறு, பண்பாடு, நாகரீகம் போன்றவற்றினை ஆய்வுக்கு உட்படுத்திய போது, வணிகத்தினதும் வணிக நிறுவனங்களினதும் முக்கியத்துவங்கள் அறிந்து கொள்ளபட்டதுடன், இதன்வாயிலாக மானிட சமுதாயம் பல்லாயிராம் ஆண்டுகளுக்கு முன்னரே வணிகம் மற்றும் வங்கியல் போன்றனவற்றில் சிறந்து விளங்கினர் என்பதற்கு பண்டைய தமிழ் இலக்கியங்களில் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், புறநானூறு, திருக்குறள் பேன்றனவற்றில் அலசப்பட்ட வணிகம் பற்றிய கருத்துகள் ஒரு சான்றாகும் ஆரம்ப காலங்களில் குறிப்பாக கிரீஸ் (Greece), ரோம் (Rome),எகிப்து (Egypt)), பாபிலோனியா (Babylon) நாகரீகங்களில் வங்கிகளாக மதத்தலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் மத தலங்கள் பணங்களினை சேமித்து வைப்பதற்கான இடமாக இருந்தன.


“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கின்ற உயர்ந்த சிந்தனை ஓட்டத்தின் வாயிலாக மானிட சமுதாயத்தின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான ஓர் கலங்கரை விளக்காக விளங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” வலுவல காலவரையினாலே என்று பவுணந்தியாரால் நன்நூலில் கூறப்பட்டது போல் புதியவைகள் புகுத்தி வெற்றிகள் பலகண்டு புதுப்பொலிவுடன் மிக வேகமாக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடமானது வளர்ச்சி பாதையில் முதன்மையானதும் தனித்துவம் வாய்ந்ததுமாகப் பயணிக்கின்றது.
இப்பீடமானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காணப்படுகின்ற புகழ் பூத்த கல்வி நிறுவனங்களுடனும் தொழில்முறை சார் அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையினை ஏற்படுத்தி தொடர்ச்சியாக இணைந்து பயணிப்பதன் மூலமாக மாணவர்களும்இ பீட அங்கத்தவர்களும் பல்வேறு வகையான நன்மையினை அனுபவிக்கின்றனா.; அதன் ஓர் நீட்ச்சியாக இலங்கை வங்கியுடனும் ஓர் உடன்படிக்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் இணைந்து கொள்வது இருசாராருக்கும் பெருமைமிகு தருணமாக அமைகின்றது.

1939ஆம் ஆண்டு சேர் ஆன்ட்ரூ கால் டெகாட் (Sri Andrew Caldecott) என்ற ஆங்கிலேய ஆளுனரினால் சம்பிரதாய பூர்வமாக கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நகர அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட இலங்கை வங்கியானது (Bank of Ceylon) இலங்கையில் காணப்படுகின்ற 24 உரிமம் பெற்ற வணிகவங்கிகளில் முதன்மையான வங்கியாக தேசத்தின் வங்கியாளர் (Bankers to the Nation) என்கின்ற மகுட வாசகத்துடன் தொழில்பட்டு இன்றும் சிறப்பாக வெற்றி நடைபோடுகின்றது.

இலங்கை வங்கியானது இலங்கையின் முன்னணி வர்த்தக, மற்றும் அரசாங்க வங்கி என்கின்ற வகையில் நிலைபேண் நிதியளிப்பு (Sustainable Financing) பரோபகாரம், மற்றும் சமூக முதலீடுகள் வழியாக குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றது. அதே வேளையில் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக ஆரோக்கியமான வணிகத்தை உருவாக்குகின்றது. இவ்வங்கியின் தூரநோக்கு (Vision); மற்றும் பணிக்கூற்று (Mission) என்பவற்றின் பிரகாரம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு, புதிய வகையான நிதி தீர்வுகளினை வழங்கி வலுவான வங்கியாக செயற்படுவதுடன். பல்வேறு வகையான சமூக பொறுப்புக்கள் (Social responsibility) சார்ந்த வேலைத்திட்டங்களினை நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக எதிர்கால தலைமுறையின் ஒளிமயமான எதிர்காலத்தினை உருவாக்கி கொள்ள கல்வி செயற்பாடுகளில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது இந்தவகையில் இலங்கை வங்கியானது யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களினை தேசத்தின் வங்கியாளன் என்ற முறையில் செய்தாலும். முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் காணப்படுகின்ற மாணவர்களின் நலன் கருதி, அதாவது அவர்களினை எதிர்காலத்தில் சுபீட்சம் உடைய தலைவர்களாக உருவாக்கி கொள்ளும் வகையில் மாணவர்களினை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களுக்கு ஒரு புலமை பரிசில் திட்டத்தினை வழங்க உத்தியோக பூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கையில் மார்கழி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை கைச்சாத்து இடுவதன் மூலமாக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும் இலங்கை வங்கியும் சட்ட ரீதியாக இணைகின்றது.

இவ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை வங்கியானது 1இ000இ000 ஃஸ்ரீ ரூபாவினை இலங்கை வங்கி திருநெல்வேலி கிளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெயரில் வைப்பிலிட்டு அதிலிருந்து வரும் வட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் வழங்கப்படும் இரண்டு பிரதான பட்டப்படிப்புகளில் (டீயஉhநடழச ழக டீரளiநௌள யுனஅinளைவசயவழைn ர்ழழெரசள னுநபசநநஇ டீயஉhநடழச ழக ஊழஅஅநசஉந ர்ழழெரசள னுநபசநந) சிறந்து விளங்கும். தலா ஒரு மாணவனுக்கு “டீழுஊ விருது” என்ற நாமத்தில் தங்கபதக்கம் ஒன்றினை வழங்கிக் கௌரவிக்கவுள்ளது.

உண்மையில் இவ் விருதானது மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான உந்துசக்தியாகக் காணப்பாடும். திருக்குறளில் வள்ளுவரின் கூற்றின்பிரகாரம்
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு”

மக்களுக்கான ஊக்கத்தின் அளவே அவர்களுடைய வாழ்க்கையின் உயர்வாக இருக்கும். எனவே சரியான நேரத்தில் திறமையினை கௌரவிப்பதன் மூலம் சிறந்த மானிட சமுதாயத்தினை உருவாக்கி கொள்ள வழிவகுக்கும் என்பதனைப் புரிந்ததன் விளைவால் உருவானதே இவ் உடன்படிக்கையாகும். ஏற்கனவே முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடம் சிறந்த மாணவர்களினை இனம் கண்டு பல்வேறு வகையான விருதுகளையும் மற்றும் புலமை பரிசில்களினை வழங்கி மாணவர்களினை ஊக்கப்படுத்துவதுடன் மாணவர்களிடையே சகிப்புத்தன்மையையும் மற்றும் சகபாடிகளுக்கு இடையேயான சயோத்தியையும் உருவாக்கும்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image