Home » யுத்தம் இல்லாத போதும் பாதுகாப்பு செலவினங்களை குறைக்க முடியாது என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் இல்லாத போதும் பாதுகாப்பு செலவினங்களை குறைக்க முடியாது என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு

Source
Share Button

பாதுகாப்பு அமைச்சிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறினார். ராணுவம் மற்றும் பொலிஸாரை பலப்படுத்த வேண்டும். நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரிவுகளுககு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் 100 பில்லியன் ரூபாவினை கல்வித் துறைக்கு பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். கல்வியற்கல்லூரி மாணவர்களுக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் நிதியினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

யுத்தம் இல்லாதபோதும் பாதுகாப்பு செலவுகளை குறைக்க முடியாது என்று விவாதத்தில் பங்கேற்ற பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாதுகாப்பு பிரிவு சகல சந்தர்ப்பங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் இறைமையினையும், மக்களினது பாதுகாப்பினையும் வலுப்படுத்துவது பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பு மீறப்படுவதாக விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். நாட்டில் நேரடியான பொலிஸ் சேவையினை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image