யூரியா உரத்தின் இரண்டாவது தொகை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது

இந்திய கடனுதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்படும் 21 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தின் இரண்டாவது தொகை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள முதலாவது தொகை, வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றின் கீழ், விவசாய மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எரிபொருள் கொள்வனவிற்கு தேவையான பணத்தை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இன்றைய தினம் வழங்குவதற்கு விவசாய அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
