யூரியா உரத்தைக் ஏற்றிவரும் மற்றுமொரு கப்பல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்
விவசாயிகள் சகல வகையான உரங்களையும் போட்டித் தன்மையான விலையில் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதேவேளை அரசாங்கம் வழங்கும் விவசாய நிவாரணத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிறுபோகச் செய்கைக்காக சுமார் 24 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரம் பகிர்தளிக்கப்பட்டுள்ளது. யூரியா உரம் போதுமானளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தள்ளார். 31 ஆயிரத்து 250 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் ஏற்றிவரும் கப்பல் அடுத்த மாத முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. உர நிவாரணத்திற்காக மாத்திரம் அரசாங்கம் இவ்வருடத்தில் ஐயாயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.