ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
