ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரயில் சேவையினை தொடர்ச்சியாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வே பொது முகாமையாளர் டயிள்யு.ஏ.டீ.எஸ். குணசிங்க தெரிவித்தார். ரயில் சேவையினை அத்தியாவசிய சேவையாக அறிவித்து கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி விசேட வர்த்தமானி வெளியிட்டார். இதன்படி நாளை முதல் பணிக்கு சமுகமளிக்காத சகல ஊழியர்களும் இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்பப்pக்க வேண்டும்; என்று ரயில்வே பொது முகாமையாளர், திணைக்களத்தின் சகல பிரதானிகளையும் தெளிவூட்டியுள்ளார்.