ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் தடையாக உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரயில் சாரதிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தேசிய வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்தியாவசிய பதவிகளுக்காக குறைந்த அளவிலானோரும், அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக அதிக எண்ணிக்கையிலானோரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் ரயில் சேவையை திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது. ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளை இணைத்துக் கொள்வதற்கு அரச சேவைப் பிரிவில் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆட்சேர்ப்புக்கான மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்களை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.