ரஷ்யாஇ வட-கொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது

ரஷ்யா பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்க்ளை
வட-கொரியாவிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. மேற்குலகின் தடைகளினால் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா கடந்த வாரம் ஈரானிடமிருந்து ஒரு தொகை ஆளில்லா விமானங்களை புதிதாக கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
