Home » ரஷ்யாவின் ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பிலான சர்ச்சை இராஜதந்திர ரீதியிலான பிரச்சினையில்லை என்று பிரதமர் – ரஷ்யாவிடம் தெளிவுபடுது;தியுள்ளார்

ரஷ்யாவின் ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பிலான சர்ச்சை இராஜதந்திர ரீதியிலான பிரச்சினையில்லை என்று பிரதமர் – ரஷ்யாவிடம் தெளிவுபடுது;தியுள்ளார்

Source
Share Button

ரஷ்யாவின் ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினையில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக பிரதமர் இந்த தெளிவூட்டலை வழங்கியுள்ளார். இது சட்டரீதியான பிரச்சினையாகும். நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவில் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக பிரதமர் ரஷ்யாவிற்கு அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த விவாகரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட வர்த்தக ரீதியான பிரச்சினையாகும். குறித்த விமானத்தின் உரிமை நிறுவனம், மாதாந்த வரியை முறையாகச் செலுத்தாதனால், அந்த நிதியை பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட அடுத்த நிறுவனம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி அரசாங்கம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது. விமானத்தை மீண்டும் ரஷ்யாவிற்கு பயணிக்க ஆவன செய்யுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்குமாறு இலங்கை அரசாங்கம், ரஷ்யாவிற்கு தெரியப்படுத்தியுள்ளது. குறித்த எழுத்துமூல கோரிக்கை கிடைத்திருக்குமாயின் விமானம் அனுப்பப்பட்டிருக்கும். எனினும் எழுத்து மூலமான கோரிக்கை கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. குறித்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் நாளை நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, வேறு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளுடன் கூடிய விடயங்களின் போது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image