ரஷ்யாவின் கம்சட்;கா தீவகத்திலிலுள்ள ஷிவெலுச் எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. சுமார் 20 கிலோமீற்றர் உயரத்திற்கு புகையும், சாம்பலும் சூழ்ந்துள்ளன. புகை மூட்டமானது எரிமலையை சூழ 500 கிலோமீற்றர் தூரத்திற்கு படர்ந்துள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிராந்தியத்திற்கான விமான போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எரிமலையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். சற்று தொலைவில் வாழும் மக்களை வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.