ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களினால் உக்ரேனில் மின்சார நெருக்கடி மேலும் தலைதூக்கியுள்ளது
உக்ரேனின் தலைநகர் கிவ் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளன. உக்ரேனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியமை இதற்கான காரணமாகும். தாக்குதலினால் சேதமாக்கப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால், அதிகளவிலான உக்ரேன் மக்கள் இருளில் மூழ்கியிருப்பதாகவும், இதனால், பாரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.