ரஷ்யாவின் மூன்றாவது விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று ஆரம்பிக்கின்றது

ரஷ்யாவின் விங் எயார் விமான சேவை இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் இலங்கைக்கான நேரடி விமான போக்குவரத்தை மேற்கொள்ளும் 3 ஆவது ரஷ்ய விமான சேவை நிறுவனமாக இது கருதப்படுகின்றது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வாராந்தம் இரண்டு தடவைகள் விங் எயார் விமான சேவை விமானப் போக்குவரத்தை மேற்கொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
