Home » ரஷ்யாவிலிருந்து AZUR Air ZF 611 விமானம் இங்கையை வந்தடைந்தது!

ரஷ்யாவிலிருந்து AZUR Air ZF 611 விமானம் இங்கையை வந்தடைந்தது!

Source

AZUR Air ZF 611 விமானம் 335 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் Venucovo, Tolmachevo, Krasnoarsk மற்றும் St. Petersburg ஆகிய நகரங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த விமான சேவை வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செய்யப்படும்.

ரஷ்யாவிற்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவின் பிரகாரம் இயக்கப்பட்டு விமானங்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படவுள்ளன.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image