ரஷ்யாவில் விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி

ரஷ்யாவின் கொஸ்ட்ரோமா நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர். குடிபோதையிலிருந்த நபர் ஒருவர் மேற்கொண்ட கைத் துப்பாக்கிச் சூட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைப்பதற்கு பல மணித்தியாங்கள் எடுத்ததாகவும், விடுதியிலிருந்து 250 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
