ரஷ்யா, உக்ரேனின் பல்வேறு நகரங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. தலைநகர் கிவ் உற்பட்ட பிரதான நகரங்களின் கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ரஷ்யாவின் தாக்குதல்களினால் மின்சார விநியோகமும் தடைப்பட்டிருக்கிறது. உக்ரேனின் பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.