ரஷ்யா தன்னை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

ரஷ்யாவை இறுக்கமான சவால்களுக்கு உட்படுத்தும்; பட்சத்தில் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அணு ஆயுதங்களை பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் (னுஅவைசல ஆநனஎநனநஎ) தெரிவித்துள்ளார். யுக்ரேனுகக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதமங்களை பயன்படுத்தக்கூடும் என்று தற்போதைய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினும் எச்சரித்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் தொடர்பில் தான் கவலை அடைவதாக யுக்ரேன் ஜனாதிபதி விளாதிமிர் செலன்;ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படையினர் மேற்கொள்ளம் ஏவுகனை தாக்குதல்களிலிருந்து தமது மக்களை பாதுகாக்கம் விடயத்தில் இஸ்ரேலிடம் உதவி கோரப்பட்டது. எனினும் இஸ்ரேல் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று செலன்;ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
