ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதலை நடத்தலாம் என உக்ரேன் ஜனாதிபதி எச்சரிக்கை

தேசத்தின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக போராடிவரும் வேளையில் நாடு சுதந்திரதின நிகழ்வை கொண்டாடுவதாக உக்ரேன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கே தெரிவித்துள்ளார். தலைநகர் கேவ் நகரில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு கொண்டாட்டத்தின் போது அவர் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். ரஷ்யாவிடமிருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்துவந்த உக்ரேன் 1991ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக பிரகடனம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
