Home » ரஷ்ய ஜனாதிபதி, துருக்கி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி, துருக்கி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்

Source
Share Button

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தானியங்களை ஏற்றுமதிக்காக கருங்கடல் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பாதையை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்படப்போவதாக துருக்கிய ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தெற்கு யுக்ரைனை கைப்பற்றுவதற்கு நேட்டோ, ஆயுதங்களைக் கொண்ட ஒரு மில்லியன் வலுவான படை ஒன்றை திரட்ட யுக்ரைன் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருங்கடலை அண்டைய பகுதிகளை மீட்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்க்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் நிலங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா முன்னேற்றம் கண்டுவரும் நிலையிலேயே யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image