ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உணவு அல்லது மருந்து நெருக்கடிகள் இல்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உணவு வகைகளுக்கோ, மருந்து வகைகளுக்கோ எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை என்று வைத்தியசாலையின் பணி;ப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். சிகிச்சைப் பெறும் சிறுவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் இல்லை என்று சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அவர் முற்றாக நிராகரித்தார். உயர் போஷாக்குடன் கூடிய உணவு வகைகள் சிகிச்சைப் பெறும் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதயம் சார்ந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள மூவாயிரம் சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்கள் என்றும் அவர் கூறினார். அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் எட்டு மாடிகளைக் கொண்ட புதிய வைத்தியசாலைக் கட்டடம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாளாந்தம் ஆகக் கூடுதலான சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்றும் டொக்டர் விஜேசூரிய கூறினார்.
