ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பலவந்தமான முறையில் கடந்த 13ஆம் திகதி நுழைந்து, ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்ட தானிஸ் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோதே அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
