ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்விலை குறைந்துள்ளது. சில தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் இருந்தது. அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாவாகவும், விற்பனை விலை 338 ரூபாவாகவும் காணப்பட்டது.