ரெயில்வேத் திணைக்களம் ஒருபொழுதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவிப்பு

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே திணைக்களம் மாதாந்தம் ஒரு பில்லியன் இலாபமீட்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் இந்த இலாபம் எரிபொருள் கொள்வனவிற்கான செலவை மாத்திரமே ஈடுசெய்கிறது. மாறாக சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு என்பவற்றுக்கான 9.6 பில்லியனை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே பொறியியலாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுடன் ரயில்வே சேவையை பொது போக்குவரத்தாக நஷ்டம் ஏற்படாத வகையில் எவ்வாறு நிர்வகித்துச் செல்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
