லங்கா சதொச நிறுவனம் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. பட்டானி பருப்பு ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 305 ரூபா ஆகும். அத்துடன் ஒரு கிலோ சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசியின் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிவப்பு அரிசியின் புதிய விலை 164 ரூபாய். இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசியின் புதிய விலை 179 ரூபாவாகும். வெள்ளை நாட்டரிசியின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை நாட்டரிசியினை 180 ரூபாவிற்கு லங்கா சதொசவில் கொள்வனவு செய்ய முடியும். இந்த விலை மறுசீரமைப்பு இன்று முதல் அமுலாவதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.