லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடர் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடன்வல தெரிவித்துள்ளார். சனத் ஜயசூரிய, விவியன் ரிச்சட், வஸீம் அக்ரம் உள்ளிட்ட பலர் இம்முறை லங்கா பிரிமியர் லீக் சுற்றுத் தொடரில் தூதுவர்களாக இணைந்து கொள்ளவுள்ளனர்.
