Home » லிற்றோ நிறுவனம் கேஸ் விநியோக நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்;துள்ளது

லிற்றோ நிறுவனம் கேஸ் விநியோக நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்;துள்ளது

Source
Share Button

லிற்றோ கேஸ் நிறுவனம், கேஸ் விநியோக நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதன்;படி, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கேஸ் விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. தேவையான அளவு கேஸ் காணப்படுவதனால், அதிக விலை கொடுத்தோ, வேறு தரப்பினரிடமிருந்தோ கேஸை கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோரை நிறுவனம் கேட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும், லிற்றோ லங்கா வெப்தளத்தின் ஊடாகவும் கேஸ் பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையங்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, 12.5 கிலோகிராம் லிற்றோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லிற்றோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை நான்காயிரத்து 910ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image