வங்கிகள் ஊடாக நாட்டுக்கு பணத்தை அனுப்பும் புலம்பெயர் பணியாளர்களுக்கு அரசாங்கத்தினால் பல சலுகைகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கை ஊழியர்கள் சட்டரீதியாக வங்கிகள் மூலம் நாட்டுக்கு பணம் அனுப்பும்போது இலத்திரணியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான விண்ணப்படிவத்தை றறற.ளi.டயடிழரசஅinஇபழஎஇடம என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்படி,
இந்த வருடத்தின் மே முதலாம் திகதி முதல் அடுத்த வருடம் ஏப்ரல் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மூவாயிரம் டொலர்களுக்கு அதிகமாக வங்கி முறையின் ஊடாக பணம் அனுப்பும் ஊழியர்களுக்கு தான் அனுப்பியுள்ள பணத்தில் 50 சதவீதப் பெறுமாணத்தைக் கொண்டு இலத்திரணியல் மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை 20 ஆயிரம் டொலர்களை அனுப்பும் ஊழியர்களுக்கு இலத்திரணியல் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும்.
சட்டரீதியாக வங்கி முறையின் ஊடாக பணம் அனுப்பும் பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வைச் சலுகையை ஆறாயிரத்து 550 டொலர்கள் வரை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தில் விரைவில் வெளியிடப்படும். சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கை ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்க அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.
