வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைஇ பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி தெரிவிப்பு

வடகொரியா நேற்று ஏவுகனை பரிசோதனை நடத்தியுள்ளது. குறுகிய தூரம் பயணிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை, பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென்-கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கமலா ஹாரிஸ் இன்று அதிகாலை சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரிய ஜனாதிபதி யூன்சுக்யோல் உடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை பற்றி இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது.
