வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் நிர்வாகசேவை விசேட தரத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகளை மாகாணத்திற்கு வெளியே வீச நடவடிக்கை இடம்பெறுகின்றது.
வடக்கு மாகாணத்தில் செயலாளர் தரத்தில் உள்ள சி.திருவாகரன்,
இளமதி சபாலிங்கம் மற்றும் ஆர்.வரதீஸ்வரன் ஆகியோருக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்து இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து வெளியேறுமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல நேற்றைய தினம் எழுத்தில் வழங்கியுள்ளார்.
மத்திய நிரவாக சேவைப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண ஆளுநரால் செய்யப்பட்ட பரிந்துரையின் பெயரில் 3 செயலாளர்களிடம் இருந்து இடமாற்ற ஒப்புதலைப் பெற்று அனுப்பி வைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண பிரதம செயலாளரை கோரியதோடு இலங்கையின் ஏனைய பிரதேசத்தில் உள்ள வெற்றிடப் பட்டியலையும் அனுப்பி வைத்துள்ளார்.
அவ்வாறு காணப்படும் வெற்றிடப் பட்டியலின் பிரதியும் குறித்த 3 செயலாளர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வடக்கிற்கு வெளியே இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு கோரும் 3 செயலாளர்களில் இருவர் தற்போதைய ஆளுநரின் பரிந்துரையின் பெயரிலேயே வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TL