யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, 108 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டது. அதன்படி, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில், 13 ஏக்கர், அரச காணியாகும்.
இந்த காணி வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, ஐந்து நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும், 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் மூலம் 205 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.