இலங்கையில் உள்ள தீவுகளின் அதிகாரத்தை முழுமையாக மத்தியிடம் தாரைவார்க்கும் வகையிலான தீவக அதிகார சபையை உருவாக்கும் நோக்கம் கொண்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவிலே பிரதான தீவைச் சுற்றியுள்ள தீவுகளை தான் நினைத்தவர்களிற்கு வழங்கும் அதிகாரத்தை பெறுவதற்காக சுற்றுலா அமைச்சின் ஊடாக தீவக அதிகார சபையை உருவாக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது.
இலங்கையானது 65,610 ச.கி.மீற்றர் பரப்பளவு கொண்ட நாடாகும் இதிலே 342 ச.கி.மீற்றர் தனியான தீவிகள். எஞ்சிய 65,268 ச.கி.மீற்றர் பரப்பளவே மீதமுள்ள பிரதேசமாகும்.
இந்த 342 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவிற்குள் 60ற்கும் மேற்பட்ட சிறு தீவுகள் உள்ளதாக இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு கூறுகின்றது.
இந்து சமுத்திரத்திலே மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு இலங்கை என்றால் இலங்கைக்கு மட்டுமன்றி பல நாடுகளிற்கும் இன்று இலங்கையை சூழவுள்ள தீவுகளே முக்கியமானதாக காணப்படுகின்றது.
இதற்காக சீனா, இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, பாகிஸ்தான்கூட இன்று இலங்கையின் ஏதோ ஒரு தீவை கண் வைக்கின்றன. அதில் மக்கள் வாழாத பல தீவுகளும் இராணுவ ரீதியிலும் இன்று முக்கியத்துவம் பெறுகின்றது. அதில் கச்சதீவு, இரணைதீவு, பாலைதீவு, பருத்தித்தீவுகள்கூட பலராலும் கண் வைக்கப்படுகின்ற காலத்தில் இவ்வாறான ஒரு அதிகார சபையை நிறுவுவதற்கு அவசரம் காட்டப்படுகின்றது.
அவ்வாறு உருவாக்கப்படும் அதிகார சபையின் அதிகாரங்கள் அனைத்துமே மத்தியிடம் மட்டுமே குவிக்கப்பட்டு மாகாணம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் கிராம மட்ட அமைப்புக்களிடம் தற்போதுள்ள எச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்படும் வகையில் இந்த அதிகார சபைக்கான அதிகார வரைவு வரையப்பட்டுள்ளது.
இதற்கு வழங்கப்படும் அதிகாரத்தின் கீழ் வரும் 60 தீவுகளிலும் எவருக்கும் எந்த திட்டத்திற்கோ அல்லது எந்த முயற்சிற்கோ இடம் வழங்கும் சர்வ வல்லமை இந்த அதகார சபையிடம் செல்வதன் மூலம் இச் சபையும் தற்போதைய மகாவலி அதிகார சபையின் பலத்துடனேயே இயங்கும்.
இச் சபை உருவாகுவதன் மூலம் தற்போது கடற்கரைகளில் கடல் அட்டைப் பண்ணை, இறால்ப் பண்ணை, நண்டுப் பண்ணை, பாசி வளர்ப்பு என வருபவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தற்போது உள்ளூர் மீனவ அமைப்புக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் அரசு மிக இலகுவாக முறியடித்து தான் நினைத்தவற்றை செய்து முடக்கும் சூழலே ஏற்படும் என மூத்த பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட இந்த அறிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் இரு மூத்த பேராசிரியர்களிடம் சமர்ப்பித்து ஆலோசணை கோரியபோது அவர்களேஇதனைக் கண்டு வியத்து நிற்பதோடு இது நிறைவேற்றப்பட்டால் 60 தீவுகளையும் தனியான நாடாக அறிவித்து அதனை இந்த அதிகார சபையிடம் தாரை வார்ப்பதற்கு ஒப்பானது என்கின்றனர்.
இந்தளவிற்கும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எனக் கூறும் அமைச்சர் மாநல மற்றும் உள்ளீர் அதிகார சபைகள் ஆகியவற்றோடு மீனவ சங்கங்களிடம் தற்போது எஞ்சியுள்ள அதிகாரத்தையும் பிடுங்கி தனது அமைச்சின் கீழ் மட்டுமே வைத்திருக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இவை தொடர்பில் இலங்கையின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதனை அறிந்திருக்கவில்லை என்பதோடு இச் சபை உருவானால் நிச்சயமாக வடக்கு கிழக்கை கண் வைக்கும் சீனாவிற்கு அதிக இடங்கள் கை மாற்றப்படும் அதனால் இலங்கை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்பே அதிகம் கேள்விக்குறியாகி இந்தியா பெரும் நெருக்கடி நிலையை சந்திக்கும் என்பதோடு தற்போது இலங்கை இந்திய எல்லையில் உள்ள கச்சதீவி இந்தியாவிற்கு தொல்லையில் உள்ள தீவாக மாறும். இதனால் இவ்விடயம் பகிரங்கமாகும்போது இலங்கைக்கு இந்தியாவே இராஜதந்திர அழுத்தங்களை வழங்க வேண்டிய கடப்பாடும் உண்டு. இதனால் தீவக அதிகார சபை சர்வதேசத்தின் இராணுவ இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் அதிகார சபையாக மாறுகின்ற ஆபத்தே உள்ளது.
இதேநேரம் மிக விரைவில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையில் இவ் விடயம் பெரும் தாக்கத்தை உண்டுபன்னும் என்பதிலும் ஐயம் இல்லை. இதன் காரணமாக இலங்கையின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்று திரும்பும் வரையில் அமைதி காக்கப்படுகின்றது. அல்லது இரகசியமாக வைக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறு உள்ளுரில் ஏன் அந்தப் பகுதியில் வாழும் மக்களிற்கே தெரியாது இரகசியமாகத் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் இடம்பெறுவதனால் அது மக்கள் நலன் சார்ந்த திட்டமாக இருக்க முடியுமா என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது.
TL