வடக்கு ரயில் மாhக்கத்தின் புனரமைப்பு வேலைத்திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்பப்தாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் மார்க்கம் தற்போது மறுசீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள் பூர்தத்pயடைந்ததும் காங்கேசன் துறையிலிருந்து அனுராதபுரம் வரை மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில்; பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.