பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கின் 109 ஏக்கர் காணி மக்களிடம் நாளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, 75ஆவது சுதந்திர தினத்திற்கு இணைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பருத்தித்துறையிலுள்ள ஒன்பது நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும்; 75 குடும்பங்களுக்கு பலாலி பிரதேசத்தில் 13 ஏக்கர் அரச காணிகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இதேவேளை, மீள்குடியேற்றப்படவிருக்கம் 197 குடும்பங்களை, மீள்குடியேற்றுவதற்குத் தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணி;ல் விக்கிரமசிங்க நகர அபிவருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.