Home » வட்டி வீதத்தில் மாற்றம் இல்லாத நிதிக் கொள்கையைப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்;மானம்

வட்டி வீதத்தில் மாற்றம் இல்லாத நிதிக் கொள்கையைப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்;மானம்

Source
Share Button

நிதிக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளாமல் வட்டி வீதத்தை தற்போதுள்ள மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலக பொருளாதாரத்தின் அண்மைக்கால மற்றும் எதிர்பார்க்கப்படும் போக்குகளுக்கு இணைவான பொருளாதார விடயங்களை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான பணவைப்பு வசதிக்குரிய வீதம் 14 தசம் 5 சதவீதமாகும். நிலையான கடன்வசதிக்கான வீதம் 15 தசம் 5 சதவீதமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் கேள்வியை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நிதிக் கொள்கையொன்றைப் பேணவேண்டிய தேவை காணப்படுவதாக நிதிச் சபை கருதுகின்றது. எதிர்பார்த்தபடி இலங்கையின் வெளிப்படையான பணவீக்கம் குறைவடைவதைக் காண முடிகின்றது. இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் இலங்கையின் இருதரப்பு கடன் உரிமையாளர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடிந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் பணத்தை அச்சிடும் அளவு குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image