வயல்களை மண்ணிட்டு நிரப்பும் செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்காக கூடுதலான வயற்காணிகள் மண்ணிட்டு நிரப்பப்படுகின்றமை தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதனால் வயல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.